***புதிய பரிமாணத்தில் உங்கள் பொன்னமராவதி ஆசிரியர் செய்தி கல்வி செய்தியாக மாறியுள்ளது. உங்கள் மேலான ஒத்துழைப்பு வேண்டுகிறோம். *அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் ! கல்வி செய்திகள் பொன்னமராவதி ஒன்றிய பகுதி ஆரம்ப,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம் ஆகும். இவ்வலைப்பகுதியில் உங்கள் பள்ளி செய்திகள் , நிகழ்வுகள் மற்றும் படங்கள் இடம்பெற வேண்டுமானால் எங்களது கைபேசிக்கு அழைக்கவும்.எங்களது கைபேசி எண் - 9944661116 மற்றும் 7373661116 அல்லது எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி- ponnamaravathyteacher@gmail.com. நன்றி. அன்புடன் ராம் விளையாட்டகம் & கல்வி செய்திக்குழு பொன்னமராவதி.*

1987 க்கு பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர குறைந்த பட்ச பொதுக்கல்வித்தகுதி +2 என்பதற்கான அரசாணை.......

CLICK HERE TO DOWNLOAD ..............

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு

CLICK-HERE-DSE - CELEBRATION OF JOY GIVING
WEEK FROM 2.10.2014 TO 08.10.2014 FOR 1 TO 12 STD
CLASSES REG INSTRUCTIONS

வருமான வரி பிடித்தம் சார்பான சுற்றறிக்கை

CLICK HERE-TO VIEW PRESS RELEASE

முக்கிய பல்கலைக்கழகங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

IGNOU-04522370733
Annamalali-04144238796
Alagappa-04565226001
TNOU-04424306600
Barathiyar-04222422222
Barathithasan-04312407092
Madras-04425399422
MKU- 04522458471
Mano maniyam- 9487999732
Periyar- 04272345766
Thiruvalluvar -04162274755
Thanks : Mr.Hariharan

எச்சரிக்கை !!!!! குடிநீர் பாட்டில்களில் ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர்
பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள்,
பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும்
எண்ணை கவனிப்பதில்லை.குடிநீர் பாட்டில்களில் 1 முதல்
7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த
பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது,
இது எந்த பொருள் வைக்க
தகுதி கொண்டது என்பதை அறியலாம்.
அடிப்புற முக்கோணத்திற்குள் எண்
''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின்
டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில்
பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.
எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ
(ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்)
வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட
பொருட்கள் விற்கப்படும்.
எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு)
என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை.
இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.
எண் ''4'' எனில், எல்டிபிஇ
(லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற
வேதி பொருளால் உருவாகி,
பொருட்களை அடைப்பதற்கான
பாக்கெட்டுகளாக இருக்கும்.
எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால்
ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,
எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்)
வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு,
பொம்மை, எலக்ட்ரானிக்
பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.
இதுதவிர
எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற
வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட
பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.viaதமிழன்
என்ற இந்தியன்இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம்
1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும்
பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள்,
பயணம் செய்வோர் என பலரும்
ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர்
நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய
மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில்
வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில்
வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென
சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட
வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த
ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென
மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ,
உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள்,
பேக்கிங்குகளில்
அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்தமிழக
அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில்,
''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர்
பாட்டில்களை பல
நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து
பயன்படுத்தக்கூடாது.
உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த
பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர்
வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்''
பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய
வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள்
அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக்
கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம்
துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

DSE - 49 HIGH / HIGHER SECONDARY SCHOOL HMs
PROMOTED AS DEO / DEEOs REG ORDER

பள்ளிக்கல்வி - அரசு / உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் - கழிப்பறை, தண்ணீர் மர்றும் குடிநீர் வசதி குறித்த விபரங்கள் அனுப்பக் கோரி உத்தரவு

DSE - HS / HSS DRINKING WATER & TOILET FACILITIES
REG DETAILS CALLED REG PROC CLICK HERE...

'எஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காணிக்கலாம்!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில்
(எஸ்.எஸ்.ஏ.,) ஒதுக்கப்படும் பள்ளி பராமரிப்பு
மானியத்தை செலவிடுவதற்கு ஒப்புதல் வழங்கும்
குழுவில், ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் தேவை
அடிப்படையில்
ஆண்டுதோறும் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ஒன்று முதல்
8 ம் வகுப்பு வரை பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு
மானியம் வழங்கப்படுகின்றன.
பள்ளி மானியமாக அரசு மற்றும் உதவி பெறும்
பள்ளிகளுக்கு ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ரூ.5 ஆயிரம், 6
முதல் 8 ம் வகுப்பு வரை ரூ. 7 ஆயிரம் வழங்கப்படும்.
பராமரிப்பு மானியம் என்பது பயன்பாட்டில் உள்ள
வகுப்பறை எண்ணிக்கை அடிப்படையில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10
ஆயிரம் வரை ஒதுக்கப்படும். பராமரிப்பு மானியம் அரசு
பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்படும். கடந்தாண்டு வரை
இம்மானியத்தை செலவிட, பள்ளி தலைமையாசிரியர்
மற்றும் கிராமக் கல்விக் குழு ஒப்புதல் போதுமானதாக
இருந்தது. ஆனால், இந்தாண்டு முதல் புதிய நடைமுறை
அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக பள்ளி தலைமையாசிரியர்,
ஆசிரியர், மாணவர், அங்கன்வாடி பணியாளர்
கொண்ட குழு ஏற்படுத்தி, இதன் ஒப்புதல்
பெற்ற பின் தான், கிராமக் கல்விக் குழுவில் வைத்து
அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
.
இதுகுறித்து இத்திட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது
: பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தை
செலவிடுவதில் சில மாவட்டங்களில்
வெளிப்படை தன்மை இல்லை என்ற சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூட்டத்தில்,
தலைமையாசிரியருடன், அந்த பள்ளி ஆசிரியர், மாணவர்
மற்றும் அங்கன்வாடி பணியாளர்களையும் குழுவில்
இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு முதல்
இக்குழுவும் ஒப்புதல் அளித்தால்தான் மானியத்தை
செலவிட முடியும். நிதியை தவறாக பயன்படுத்த
முடியாது, என்றார்.

ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்கள்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை
வடிவமைப்பது தொடர்பாக, மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் சார்பில்,
பயிலரங்கம்
சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
முதல் கட்டமாக, தமிழ் மொழியில் திறனைச்
சோதிக்கும் வகையிலான புதுமையான கேள்விகளைக் கேட்பது
தொடர்பாக, மாவட்ட ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களுக்குப் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இந்த விரிவுரையாளர்கள் மூலம், ஆசிரியர் பயிற்சிப் பட்டயப்
படிப்பில் சேரும் மாணவர்கள், புத்தாக்கப் பயிற்சிக்கு வரும்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு புதிய முறையில்
வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக
பயிற்சிகள் அளிக்கப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
குறிப்பாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும்
பாட ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுவதாக
அவர்கள் தெரிவித்தனர்.
மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண்
நிறுவனத்தின் திட்ட இயக்குநர் எல்.ராமமூர்த்தி, தமிழ்
மொழியில் புதுமையான கேள்விகளை வடிவமைப்பது
தொடர்பாக விரிவுரையாளர்களுக்குப் பயிற்சி
அளித்தார். இந்தப் பயிற்சி தொடர்பாக அவர்
கூறியது: தமிழ் மொழி வினாத்தாள்களில்
இலக்கியம் சார்ந்த கருத்துகளைச் சோதிக்கும் கேள்விகளே அதிகம்
இடம்பெறுகின்றன. மாறாக, பேசுதல், எழுதுதல்
ஆகிய மொழித்திறன்களைச் சோதிக்கும் வகையிலான
கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற வேண்டும்.
அந்த மொழியறிவுத் திறனை மாணவர்களிடம்
எப்படி வளர்க்கலாம் என்பது குறித்தும், இந்தத் திறன்
தொடர்பான சரியான கேள்விகளை வடிவமைப்பது
தொடர்பாகவும் விரிவுரையாளர்களுக்கு பயிற்சி
அளிக்ககப்பட்டது என்றார் ராமமூர்த்தி.
இப்போது, தமிழ் மொழி வினாத்தாளில் மாற்றம்
செய்வதற்கான மூன்று நாள் பயிலரங்கம்
நடத்தப்படுகிறது. விரைவில் பிற பாடங்களுக்கும் அந்தந்தத்
துறை நிபுணர்களைக் கொண்டு வினாத்தாள்
வடிவமைப்பை மாற்றுவதற்கான பயிலரங்குகள்
நடத்தப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,
பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொன்னமராவதி வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலம் தழுவிய மாலைநேர ஆர்ப்பாட்டம்.

புகைப்படம்

தமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பானுக்குச் செல்ல தேர்வு

மாணவர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜப்பான்-கிழக்கு ஆசியா இடையே மாணவர்கள், இளைஞர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் (ஜெனிசிஸ்) கீழ் இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் செல்கின்றனர்.

புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை

புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும்' என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு தேர்வு பெற்ற 14700 பேரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. இதில் 100 பேர் வரை 'ஆப்சென்ட்' ஆனதாக தெரிய வந்துள்ளது.

வங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் :அக்., 1ம் தேதி முதல் அமல்

வங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்
எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம்
வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன. வங்கிகள்
இந்த அறிவிப்பை, வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்

நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு ஆங்கிலப்பாடத்துக்கான வளரறி மதிப்பீடுகள்

பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள

EMIS ONLINE ENTRY

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .

பள்ளிக்கல்வி - 01.01.2006க்கு பிறகு தனி ஊதியம் ரூ.500 / 600 உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் ஊதியத்தில் சேர்க்கப்பட்டால், அவற்றை உடனடியாக பிடித்தம் செய்து ஒரே தவணையாக அரசு கணக்கில் செலுத்த உத்தரவு

DSE.52615/A1/C3/2014, DATED.14.8.14 - Headmasters
of High/Higher Secondary Schools are not entitled for
the PP in the revised scale of pay reg Proc Click Here...

ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்பணியிட மாற்றம்

1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக
பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ
முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி TNGTF வழக்கு தொடுப்பு

2004-05ம் ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அனைத்து கல்வித்தகுதி இருந்தும் இவரக்ளுக்குக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை. அரசாணை 720 நாள்

பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும்10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டுபொதுத்தேர்வு காலஅட்டவணையில் மாற்றம்செய்துள்ளது

10 மற்றும் 12ம்
வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு
நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக
வசதியின் காரணமாக கால அட்டவணையில் 12ம்

தமிழக அமைச்சரவை மாற்றம்!மாதாவரம் வி.மூர்த்தி நீக்கம்!பி.வி.ரமணா சேர்ப்பு!

அமைச்சர் பொறுப்பில் இருந்து மாதாவரம் வி
.மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளுர் தெற்கு மாவட்ட அதிமுக
பொறுப்பில் இருந்து மாதாவரம் வி.மூர்த்தி

பொன்னமராவதி நகர பள்ளிகளில் நடைபெற்ற ஆசிரியர் தினம் விழா புகைப்படங்கள்.

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்கமத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான
அறிவிப்பு விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் ரத்தாகுமா? சிக்கல் தீர்ப்பாரா முதல்வர்

undefined